முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க

கேவிஸ்கான் பெப்பர்மிண்ட் லிகுய்ட்

பாதுகாப்பு பற்றிய கண்ணோட்டம்

Cover Image Full Video Tamil

தயாரிப்பு பற்றி மேலும் அறிந்துகொள்ள

கேவிஸ்கான் பெப்பர்மிண்ட் லிக்விட் என்றால் என்ன மற்றும் அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

ஒவ்வொரு 5 மிலியிலும்: சோடியம் ஆல்ஜினேட் 250 மிகி, சோடியம் பைகார்பனேட் 133.5 மிகி மற்றும் கால்சியம் கார்பனேட் 80 மிகி ஆக்ட்டிவ் இங்க்ரேடிஎன்ட்ஸ் உள்ளன.
மற்ற இங்க்ரேடிஎன்ட்ஸ் கார்போமர், மெத்தில் மற்றும் ப்ரோபைல் பாராஹைட்ராக்ஸிபென்சோயேட்ஸ், சோடியம் சாக்கரின், பெப்பெர்மிண்ட் ஆயில், சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் நீர்.
இந்த தயாரிப்பில் சர்க்கரை அல்லது குளுட்டன் இல்லை.

இந்த மருந்து, ஆசிட் ரிகர்ஜிடேஷன், நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற கேஸ்ட்ரோ- ஈஸோஃபாகியல் ரிஃப்ளக்ஸ் சிம்ப்டம்ஸ்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது, எடுத்துக்காட்டாக, கர்ப்ப காலத்தில் அல்லது உணவு உட்கொண்ட பிறகு ஏற்படக்கூடியவை.

நெஞ்செரிச்சல் என்பது வயிற்றின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் உணவுக் குழாயின் அடிப்பகுதியின் தளர்வு காரணமாக மீண்டும் உணவுக் குழாயில் மேல்நோக்கி செல்வதால், மார்பில் ஏற்படும் எரிச்சல் உணர்வு ஆகும், இது அமிலம் பின்னோக்கி தள்ளப்படுதல் (ஆசிட் ரிஃப்ளக்ஸ்) என்று அழைக்கப்படுகிறது, இது உணவுக் குழாயின் உட்புற சுவரில் எரிச்சலை உண்டாக்குகிறது. இதனால் அழற்சி மற்றும் வலி ஏற்படுகிறது.

அஜீரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் சில சமயங்களில் தெரிவதில்லை அல்லது வயிற்று அமிலம் இயற்கையான செரிமான உட்சுவர்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படலாம், இதனால் எரிச்சல், புண், வீக்கம் அல்லது அல்சர் போன்றவை உண்டாகின்றன. இதற்கு ஏற்கனவே இருக்கும் ஏதேனும் நோய், மன அழுத்தம், உணவு முறை குறைபாடு அல்லது சில மருந்துகள் காரணமாக இருக்கலாம். இவை வயிற்று உப்புசம், வலி, உணவு சாப்பிட்ட பின் வயிறு முழுமையாக நிரம்பிய உணர்வு, நெஞ்செரிச்சல் மற்றும் ஏப்பம் போன்ற அறிகுறிகளாக வெளிப்படுகின்றன.

•வறுத்த மற்றும் பொறித்த உணவுகள்
•கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் மற்றும் பால் பொருட்கள்
•அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல்
•மிக வேகமாக சாப்பிடுதல்
•இரவில் தாமதமாக சாப்பிடுதல்
•மது அருந்துதல், புகைபிடித்தல், காஃபின் கலந்த பானங்கள் மற்றும் மிகவும் காரமான உணவு
•மன அழுத்தம், அதிகம் உட்கார்ந்தபடியே இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் அளவுக்கு அதிகமான எடை ஆகியவையும் பங்களிக்கும் காரணிகளாகும்.

•வயிறு உப்பிய உணர்வு
•நெஞ்சுப் பகுதியில் எரிச்சல்/வலி
•ஏப்பம் விடுதல்
•சாப்பிட்ட உணவு வயிற்றிலிருந்து திரும்ப வாய்க்கு வருதல்
•உடல்நிலை சரியில்லாத உணர்வு

நெஞ்செரிச்சல் மற்றும் கர்ப்பம்

பொதுவாக இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:
1. கர்ப்ப காலத்தில் வெளியிடப்படும் ஹார்மோன்கள் இயல்பாக வயிறு அமிலத்தை கீழே வைத்திருக்கும் தசைகளை தளர்த்தும்.
2. உங்கள் கர்ப்பம் வளரும்போது, அது உங்கள் உணவுக் குழாயின் மீது அழுத்தத்தை அதிகரிப்பதால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்த தயாரிப்பின் செயல்பாடு வயிற்றின் மேல் மட்டும் இருப்பதால் மற்றும் இரத்த ஓட்டத்தில் நுழையாது என்பதால் இந்த தயாரிப்பு "கர்ப்பத்திற்கு ஏற்றது” +.
+ (i) Strugala V et al. ISRN Obstet Gynecol. 2012;2012: 481870 (ii) Uzan M et al. Rev Fr Gynecol Obstet. 1988;83(7-9):569-72

இந்த தயாரிப்பு எப்படி வேலை செய்கிறது?

சோடியம் ஆல்ஜினேட் இயற்கையானது மற்றும் கடற்பாசியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. சோடியம் ஆல்ஜினேட் வயிற்று ஆசிட்டுடன் தொடர்பு கொண்டு ஒரு தடிமனான அடுக்கை உருவாக்குகிறது, இது ராஃப்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ராஃப்ட் வயிற்றின் உள்ளடக்கங்களின் மேற்பரப்பில் மிதக்கிறது மற்றும் ஒரு வலுவான உடல் தடையாக செயல்படுகிறது, இது வயிற்று உள்ளடக்கங்கள் உணவுக் குழாயில் மேல்நோக்கிச் செல்வதைத் தடுக்கிறது

இந்த தயாரிப்பு ஆண்டாசிடை விட வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. ஆண்டாசிட் ஆனது குறுகிய காலத்தில் வயிற்று அமிலத்தை நியூட்ராலைஸ் செய்கிறது , ஆனால் ஆசிட் சுரப்பினால் இந்த விளைவு விரைவில் உதவியற்றுப் போகிறது.

சோடியம் ஆல்ஜினேட் வயிற்று ஆசிட்டுடன் தொடர்பு கொண்ட உடனே ஒரு தடிமனான அடுக்கை உருவாக்குகிறது, இது ராஃப்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ராஃப்ட் வயிற்றின் உள்ளடக்கங்களின் மேற்பரப்பில் மிதக்கிறது மற்றும் ஒரு வலுவான உடல் தடையாக செயல்படுகிறது, இது ஆசிட் உணவுக் குழாயில் மேல்நோக்கிச் செல்வதைத் தடுக்கிறது சுருக்கமாக? இது “3 நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்குகிறது” # மற்றும் "4 மணிநேரம் வரை நீடித்த நிவாரணம்".*
# Strugala V et al. J Int Med Res. 2010 Mar-Apr;38(2):449-57
*(i) Chevrel B. J Int Med Res. 1980;8(4):300-2“
(ii) Mandel KG et al. Aliment Pharmacol Ther. 2000 Jun;14(6):669-90

இந்த மருந்தை எப்படி எடுத்துக்கொள்வது?

வாய்வழி பயன்பாட்டிற்கு மட்டுமே.
பயன்படுத்துவதற்கு முன் நன்றாக குலுக்கவும்.
10-20 மிலி உணவுக்குப் பிறகு மற்றும் படுக்கை நேரத்தில் அல்லது பிசிசியன்ஸ் பரிந்துரைத்தபடி எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் 12 வயதுக்குட்பட்டவராக இருந்தால், மெடிக்கல் ஆலோசனையின் பேரில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன், "முன்னெச்சரிக்கை மற்றும் எச்சரிக்கை" பகுதியை கவனமாக படிக்கவும். உங்களுக்கு எதுவும் உறுதியாக தெரியவில்லை என்றால், உங்கள் பார்மசிஸ்ட் அல்லது மருத்துவரிடம் கேளுங்கள்.

பரிந்துரைக்கப்பட்ட டோஸை எடுத்துக்கொள்ளும்போது எப்போதும் கவனமாக இருங்கள். நீங்கள் ஒரு டோஸை மறந்துவிட்டால், அடுத்த முறை டோஸை இரட்டிப்பாக்க வேண்டிய அவசியமில்லை, முன்பு போலவே எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த தயாரிப்பை நீங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால், சின்ன அறிகுறிகள் இருக்கலாம்; வயிற்றில் சில அசௌகரியங்கள் ஏற்படலாம். இந்த உணர்வு போகவில்லை என்றால் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்.

முன்னெச்சரிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள்

இந்த தயாரிப்பை எடுத்துக்கொள்வதற்கு முன் லேபிளை கவனமாக படிக்கவும்.
இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன், காப் சீல் உடைக்கப்படாமல் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
பேக்கில் காட்டப்பட்டுள்ள காலாவதி தேதிக்குப் பிறகு பயன்படுத்த வேண்டாம்.
லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு இங்கிரிடெய்ன்ட்ஸ்களுக்கும் உங்களுக்கு அல்ர்ஜி இருந்தால் இந்த தயாரிப்பை எடுக்க வேண்டாம்.
இதய செயலிழப்பு, கிட்னி ப்ரோப்லேம்ஸ், ஹை பிளட் பிரஷர் மற்றும் பாதம் , கால் , கணுக்கால் உடம்பு வீக்கம் போன்ற நோய்களுக்கு உப்பு குறைந்த உணவைப் பின்பற்றுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தால், இந்த தயாரிப்பை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் டாக்டர்ரிடம் கேளுங்கள்.
ஹை பிளட் கால்சியம் லெவெல்ஸ், சிறுநீரகங்களில் கால்சியம் லோட் அல்லது மீண்டும் மீண்டும் கால்சியம் கொண்ட சிறுநீரக கற்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் கவனமாகப் பயன்படுத்தவும்.
மற்ற மருந்துகளை எடுத்துக் கொண்ட இரண்டு மணி நேரத்திற்குள் இந்த தயாரிப்பை எடுக்க வேண்டாம். (மேலும் தகவல்களுக்கு, “நோயாளியின் தகவல் லீப்லேட்டை “தயவு செய்து படிக்கவும்).

இந்த தயாரிப்பை எடுத்துக் கொண்ட 7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தொடர்ந்தால், உங்கள் டாக்டர்ரை அணுகவும்.
நீங்கள் ஏதேனும் சைடு எபக்ட்ஸ் விளைவுகளை சந்தித்தால், தயாரிப்பை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு உங்கள் டாக்டர்ரை அணுகவும்.
consumerHealth_India@reckitt.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் பக்க விளைவுகளை நேரடியாகப் புகாரளிக்கலாம்.
பக்க விளைவுகளைப் புகாரளிப்பதன் மூலம், இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்த கூடுதல் தகவலை வழங்க உதவலாம்.

30°C க்கு மேல் பத்திரப்படுத்த வேண்டாம்.
குளிர் சாதன பெட்டியிலோ அல்லது உறைய வைக்கவோ வேண்டாம்.
குழந்தைகளுக்கு எட்டாத மற்றும் பார்வைக்கு வெளியே வைக்கவும்.

எங்களை தொடர்பு கொள்ள

எங்களை அழைக்க

18001035012

டோல் ஃப்ரீ நம்பர்

எங்களுக்கு எழுதுங்கள்

Reckitt Benckiser (India) Pvt. Ltd.,
DLF Cyber Park,
6th & 7th floor (Tower C), 405 B,
Udyog Vihar Phase III, Sector 20, Gurugram-122016

கடைசியாக அப்டேட் செய்த தேதி 2023-02-10
சேர்ப்பதற்கான அல்லது மேம்படுத்துவதற்கான காரணங்கள்

புதிய தயாரிப்பு சேர்க்கப்பட்டது.